பண்டாரவளை, எல்லா பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி எல்ல, கிதலெல்ல பகுதியில் உள்ள ஒரு ஹொட்டலில் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதியர் உட்பட 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மணமக்கள், மணமகளின் தாயார் உள்ளிட்ட 6 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளதாக எல்லா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். கும்பல்வெல மற்றும் மகுலெல்லவில் வசிப்பவர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
அந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், தொடர்பிலிருந்தவர்கள் என சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.