திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பக்தரை போல் கோவிலுக்குள் நுழைந்து கோவில் பூட்டிய பிறகு திருட முயற்சி செய்த இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதையடுத்து கோவில் ஊழியர்கள் அளித்த புகாரை வைத்து குற்றப்பிரிவு காவல் நிலைய டிஎஸ்பி முரளிதர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்
இந்த ஆய்வின் போது நேற்று இரவு கோவிலை தேவஸ்தான ஊழியர்கள் பூட்டி சீல் வைப்பதற்கு முன்பே கோவிலுக்குள் பக்தரை போல உள்ளே நுழைந்த நபர் கோவிலுக்கு உள்ளேயே இருந்து இருப்பது தெரிய வந்தது
கோவில் அனைத்தும் பூட்டிய பிறகு நள்ளிரவில் அந்த இளைஞர் கோவிலுக்குள் உள்ள உண்டியலில் சீல் வைக்கப்பட்ட பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார் ஆனால் பூட்டு திறக்கப்படாத நிலையில் அவர் அங்கேயே தங்கிய நிலையில் அதிகாலையில் கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்தபிறகு அவர் தப்பிச் சென்றுள்ளார்
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது இந்த காட்சிகளின் ஆதாரமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஏற்கனவே இதே கோவிலில் உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட இருந்த வைர கிரீடம் பத்தரை போல் வந்த மர்ம நபர் திருடி சென்றார் அவரை மத்திய பிரதேசத்தில் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கிரீடத்தை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
எப்பொழுதும் பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் தொடர்ந்து திருடர்கள் குறிவைத்து திருட முயற்சி செய்வது பக்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
தேவஸ்தானம் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறும் அதே வேளையில் தொடர்ந்து திருட்டு சம்பவம் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது