மக்கள் பொதுவாக முட்டைக்கோஸை காய்கறி வடிவில் சாப்பிடுவார்கள், அதேபோல் இவை சீன உணவுகள், சூப்கள், சாலடுகள் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பச்சை, ஊதா நிறங்களில் காணப்படும் முட்டைக்கோஸில், பல சத்துக்கள் நிறைந்துள்ளது.இதன் ஜூஸ் செய்து குடித்தால் அதன் பலன்கள் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் முட்டைக்கோஸ் உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், மலச்சிக்கல் ஏற்படாது. இந்த காய்கறி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும் இவை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
காணப்படும் சத்துக்கள்
இதில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம், மெக்னீசியம், தயாமின், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, பைட்டோநியூட்ரியண்ட்ஸ், நார்ச்சத்து போன்றவை இருப்பதால், இது மிகவும் சத்தான காய்கறியாகும். முட்டைகோஸில் இருந்து தயாரிக்கப்படும்.
ஏற்படும் நன்மைகள்
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நீங்கள் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்பட்டால், தினமும் ஒரு கப் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிக்கவும்.
இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல வகையான தாதுக்கள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
முட்டைக்கோஸ் ஜூஸை தொடர்ந்து குடிப்பதால் உடலில் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ரால் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று பல ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.
கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிக அளவில் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், இது இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆரோக்கியமானது.
அதிக பருமனானவர்கள், தங்கள் உடல் எடையைக் குறைக்க முட்டை கோஸ் ஜூஸ் குடிக்கலாம். இது நமது உள் உறுப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழிக்க வல்லது. குறைவான கலோரியே உள்ளதால் கொழுப்பும் சேராது.இதனால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.
எப்படி செய்வது
முட்டைகோஸ் – அரை கப்
சீரகம் – 1/2 டீஸ்புன்
உப்பு – சிறிதளவு
மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன்
இஞ்சி – ஒருஇஞ்சி
எலுமிச்சை – 1
புதினா இலைகள் – 4
முட்டைக்கோஸை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, அதனுடன் துருவிய இஞ்சி, சீரகம் மற்றும் புதினா இலைகளுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து சாறை மட்டும் பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சாறில் ஒரு சிட்டிகை அளவு உப்பும் ஒரு எலுமிச்சையின் சாறும் கலந்து, அதனுடன் மிளகுத் தூளும் சேர்க்க வேண்டும். இப்போது முட்டைகோஸ் ஜூஸ் தயார்.