இன்றைய காலக்கட்டத்தை பொருத்தவரையில் வேலை மற்றும் குடும்பம் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் தனிநபர்களின் தூக்கத்தை சீர்குலைக்கிறது.
இருப்பினும், ஷிஃப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கு தூக்க நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால், உடல்நல பாதிப்பில் சிக்கல்களை ஏற்படுத்தலாம், இதன் காரணமாக டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கும், சுறுசுறுப்பாக செயல்பாட்டுக்கும் தூக்கம் மிக முக்கியமானது.
எனவே சிறந்த தூக்கத்தால் ஏற்படும் பிரச்சினை மற்றும் சிறந்த தூக்கத்திற்கு நாம் என்னனென்ன செய்ய வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.
ஹார்மோன்கள் மீதான தாக்கம்
தூக்கமின்மை காரணமாக குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த தேவையான ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் வெளியீட்டை சிதைக்கின்றன. இன்சுலின் மற்றும் கார்டிசோல் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் இந்த செயல்முறைக்கு முக்கியமானவை.
டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும்
குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாட்டில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கத்தின் எண்ணிக்கை அல்லது கால அளவு மாற்றங்கள் இந்த செயல்முறைகளை பாதிக்கின்றன, இதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும், டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
பசியின்மை மற்றும் எடை கட்டுப்பாடு
போதிய தூக்கமில்லாதது லெப்டின் மற்றும் கிரெலின் உள்ளிட்ட பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை பாதிக்கிறது. சரியான தூக்கமின்மை காரணமாக ஒரு நபரின் லெப்டின் அளவை பாதிக்கலாம், இது அவர்களுக்கு பசியை உணரச் செய்கிறது, மேலும் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
சிறந்த தூக்கத்திற்கான குறிப்புகள்
முடிந்தவரை தினமும் ஒரே மாதிரியான தூங்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
இது சர்க்காடியன் ரிதத்தின் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்கிறது. உங்கள் படுக்கையறை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், சத்தமில்லாமலும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன், வசதியான படுக்கைகளை பராமரியுங்கள் மற்றும் பிரகாசமான வெளிச்சத்தை அளிக்கும் எலக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
காஃபின் மற்றும் நிகோடின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதிக உணவை சாப்பிடுவதையும் குறைக்க வேண்டும். இவை தூங்குவதில் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் மற்றும் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கவும் வழிவகுக்கலாம்.