ஆரஞ்சு பழம்
ஆரஞ்சுபழம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதன் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை மீண்டும் மீண்டும் நம்மை ருசிக்க வைக்கத் தூண்டும். ஆரஞ்சு பழத்தில் அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
வாய் துர்நாற்றத்திற்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாய் கிருமிகளை கட்டுப்படுத்த உதவும்.
உடல் எடையை குறைக்க
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஃபைபர் கொழுப்பைக் குறைக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்யும்.
சருமம் பளபளக்க
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆரஞ்சில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. இதனால், சருமம் என்றும் இளமையாகவே இருக்கும்.
தூக்கத்திற்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸை இரவு உணவிற்கு பிறகு, ஆரஞ்சு பழச்சாறு அல்லது இரண்டு ஆரஞ்சு பழத்தையோ சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
புற்றுநோயை தடுக்க
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை உருவாக்கும் செல்களை அழித்து உடலை பாதுகாக்கும், மேலும், புற்றுநோய் வராமல் தடுத்து விடும்.
விந்தணு சக்தியை பெற
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிக்கும். இப்பழத்தில் உள்ள பொலேட் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்றி மலட்டுத்தன்மை பிரச்னையை போக்கிவிடும்.