லியோ படத்திற்கு பின் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தான் தளபதி 68. லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் வெளியிட்டார்.
இதனால் லியோ படத்தின் அப்டேட்டை விட தளபதி 68 படத்தின் அப்டேட்டிற்காக தான் ரசிகர்கள் அதிகமாக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் கூட்டணி அமைக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிகளவில் இந்த கூட்டணியின் மீது எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் யுவன் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தளபதி 68 படத்தி இசை எப்படி இருக்கும் என கேள்வி கேட்டகப்பட்டது.
அதற்கு பதிலளித்த யுவன் ‘ அது வரும் போது பாருங்க’ என கூறினார். மேலும் மங்காத்தா படம் போல் தளபதி 68லும் இசை இருக்குமா என கேள்வி எழுப்பினார்கள். அதற்க்கு பதிலளித்த யுவன், ‘இருக்கும்’ என ஒரே வார்த்தையை கூறினார்.