தலவாக்கலை – சென்.கிளயார் வனப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.
சென்.கிளயார் வனப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் தீப்பரவல் ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்னர்.
எனினும், தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தீ வேகமாக பரவி சுமார் 30 ஏக்கர் வரை தீக்கிரையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மனித செயற்பாடு மூலமே இத்தீப்பரவல் ஏற்பட்டிருக்கும் என சந்தேகிக்கும் பொலிஸார், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.