ஆப்கானிஸ்தானில் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதன்கிழமை இரவு மத்திய மாகாணமான Maidan Wardak-ன் Behsud மாவட்டத்திலே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் சிறப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரே தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, இந்த விபத்தில் 4 குழுவினர், 5 பாதுகாப்பு படை வீரர்கள் என ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணங்கள் மற்றும் விபத்து நடந்த பகுதியில் தற்போதைய நிலைமை குறித்து முரண்பட்ட அறிக்கைகள் வெளியாகியிருப்பதால், சம்பவம் தெடார்பில் கூடுதல் விவரங்கள் தெரியவில்லை.