பிரபல திரைப்பட நடிகர் வேதம் நாகையா காலமானார்.
வேதம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் நாகையா.
இப்படத்தில் நாகையாவின் கதாபாத்திரமும், நடிப்பும் பாராட்டப்பட்டன. இதனால் ‘வேதம்’ நாகையா என்றே இவர் அறியப்பட்டார்.
தொடர்ந்து யே மாய சேஸாவே, கமனம், நாகவல்லி போன்ற படங்களில் நாகையா நடித்தார். இதோடு தமிழில் வெளியான ஸ்பைடர் உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பின் காரணமாக சில உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார் நாகையா.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அன்று நாகையா காலமானார்.
நாகையாவின் மரணத்துக்கு நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.