தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் திவ்வியேஷ், யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
11ஆம் வகுப்பு படித்து வரும் திவ்வியேஷ், யோகாவில் டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே உக்கிரேன் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து சாதனை படைத்திருந்த நிலையில், அவருடையை சாதனையை திவ்வியேஷ் முறியடித்துள்ளார்.