ஜப்பானில் தனிமையின் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளதால், அந்நாட்டில் முதல் முறையாக தனிமைக்கென ஒரு புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அதற்கான அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டங்களில் மிக அதிக எண்ணிக்கையான தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக பிரதமர் Yoshihide Suga தெரிவித்துள்ளார்.
இதனால், நாட்டில் தற்கொலைகளை குறைக்க, இம்மாத தொடக்கத்திலிருந்து தனது அவையில் முதல் முறையாக ‘தனிமை’ அமைச்சகத்தை Suga உருவாக்கியுள்ளார்.
இந்த புதிய இலாகாவிற்கு அமைச்சராக, ஏற்கெனவே நாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் பிராந்திய பொருளாதாரங்களை புத்துயிர் பெறுவதற்கும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் Tetsushi Sakamoto-வை Suga நியமித்துள்ளார்.
உலகிலேயே முதல் முறையாக 2018-ஆம் ஆண்டு பிரித்தானியா ‘தனிமை’ அமைச்சரை நியமித்தது. அதனை முன்மாதிரியாகக் கொண்டு ஜப்பானிய அரசு இப்போது தனிமைக்கான புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் அவுஸ்திரேலியா உள்ளட்ட சில பெரிய நாடுகளும் இது குறித்து ஆலோசித்து வருகிறது.