நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்க்ஷ தற்போது மாலைதீவில் தனி தீவொன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (13) அதிகாலை தனது பாரியார் சகிதம் மாலைதீவை சென்றடைந்துள்ளார். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று(13) அதிகாலை 1.45 மணியளவில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் மாலைதீவின் தலைநகரான மாலே நகரை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மாலைதீவில் தனி தீவொன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை கோட்டாபய ராஜபக்சவின் , பதவி விலகல் குறித்த அறிவிப்பை, சபாநாயகர் இன்று வெளியிடுவார் என எதிர்ப்பார்ர்க்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.