மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது பெண் கடத்தப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள Gogunda-வின் Surajgarh பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காணவில்லை என அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். மறுநாள் சென்று அவரை கண்டுபிடித்து தருமாறு Gogunda பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணை பொலிஸார் தேடியுள்ளனர். இந்த நிலையில், அவர் அதே ஊரில் ஒரு பரபரப்பான சாலையில் சுற்றித்திரிந்தபொது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது, அவர் இரண்டுக்கும் மேற்பட்டோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததும் உறவினர் அதிர்ச்சியடைந்தனர். தனக்கு நடந்த கொடுமை என்னெவென்று கூட தெரியாமல் சாலையில் சுற்றித்திருந்துள்ளார் அப்பெண்.
பின்னர் இது குறித்த விசாரணை மேற்கொண்ட பொலிஸ், ஞாயிற்றுக்கிழமையன்று இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், வீட்டில் தனியாக இருந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி, ஊருக்கு ஒதுக்குபுறமாக கொண்டுசென்றதாகவும், பின்னர் அவரை சீரழித்துவிட்டு, அங்கேயே விட்டுச்சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை விரைவில் தேடி கண்டுபிடித்து கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.