கொரோனா தடுப்பூசி அவசியமானது என நடிகரும் இயக்குனருமான பாரத்திபன் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட்டிருக்குமோ என சந்தேகங்கள் எழுந்த நிலையில், விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், கொரோனா தடுப்பூசி போட மக்களிடையே ஒருவித அச்சம் நிலவி வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், தடுப்பூசி அவசியமானது என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, என் அன்பு மகள் கீர்த்தனா இத்த’கவலை’ பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை!
ஒவ்வாமை (allergy)சில சமயங்களில் உணவு,ஒப்பனை,அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு. பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும்.
இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது.
எனவே தடுப்பூசி அவசியமானது. but ஜூரம்,உடல் வலி போன்ற ஒரு reaction வந்து போகலாம். என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.