டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 19000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.