ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக 12 விடயங்களை கொண்ட குற்றப்பத்திரிகையினை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையை கடந்த அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு குழு மற்றும் செயலகம் என்பன தொடர்பில் விசாரணை செய்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
அதில் மூன்று குற்றச்சாட்டுகள் தேசிய நிறைவேற்றுக்குழு, ஊழல் ஒழிப்பு குழு மற்றும் ஊழல் ஒழிப்பு செயலகம் என்பன உருவாக்கப்பட்டமை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த மூன்று குழுக்களை நிறைவேற்றுவதற்கு ஒத்தாசை வழங்கியமையின் ஊடாக முன்னாள் பிரதமர் அரசியலமைப்பை மீறியுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.