இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் ஜனாதிபதிடம் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
சஜித் தெரிவிக்கையில்,
மக்களின் ஆணை இந்த அரசுக்கு இருக்கிறதா ? ஒரு தேர்தலை வைத்துப் பாருங்கள்.ஏன் பயப்பிடுகிறீர்கள்.தேர்தலை வைத்தால் எல்லாமே தெரிந்து விடும்.
மக்களின் மனதில் இப்போது என்ன இருக்கிறது என்று கடந்த கால போராட்டம் உங்களுக்கு நினைவு படுத்தும். மக்களின் பிரச்சினைகளை உங்களால் தீர்க்க முடியாது.
தேசிய சொத்துக்களை விற்று அதில் உங்களுக்கு இலாபம் தேடுகிறீர்கள். ஆனால் இப்போது இலாபம் உழைக்கின்ற அரச நிறுவனங்களை நீங்கள் கைவிட்டு விட்டீர்கள்.
இப்போது நிதி இல்லை என்று காரணம் காட்டி தேர்தலை பிற்போடுகிறீர்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.