ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரும் தமது செலவுகளை மட்டுப்படுத்தி நிதிக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும் இலங்கை மத்திய வங்கி அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் வீழ்ச்சி தொடர்பில் அதிகாரிகளுக்கும் பொறுப்பு இருப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு அதிகளவில் தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறான நிலை தற்போது தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.