கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி் கோட்டபாய ராஜபக்ஃ, எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்தார்.
அதற்கமைய வாகன இறக்குமதியில் மின்சார கார்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனையடுத்து வாகனங்களின் விலையை உயர்த்தும் சில குழுக்கள், வாகனங்களை இறக்குமதி செய்யும் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை கணிசமாகக் குறைக்கப்படலாம் என்ற கருத்தை சமூகத்தில் பரப்ப முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.
இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் மீண்டும் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான வதந்திகளை பரப்பி வருவதாக தெரியவந்துள்ளது. இந்த பொய்யான தகவல்களால் பொதுமக்களை ஏமாற்றி அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்ய தூண்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு விளம்பரங்களை பதிவிட்டு “உங்கள் வாகனத்திற்கான சிறந்த விலை எங்களிடம்” என குறிப்பிட்டு வாகனங்களை விற்பனை செய்ய மோசடியாளர்கள் தூண்டுகின்றனர். அதனை கொள்வனவு செய்து 2 மாதங்களில் மிகப்பெரிய தொகையில் விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டாலும், தற்போதுள்ள வாகனங்களின் விலைகள் குறைக்கப்படாது என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் வாகனங்களின் விலை அதிகரிப்பதற்கு டொலரின் பெறுமதி, வாகன உதிரிபாகங்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யாமை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.