கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது அழகு, உணவு மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது
கற்றாழையில் இன்னும் பல நன்மைகள் உள்ளன. கற்றாழையில் உள்ள சதைப்பகுதி 96 சதவீதம் நீரால் ஆனது. கற்றாழை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்படுகிறது.
கற்றாழை காயங்களை குணப்படுத்தும் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது.
வெயிலிலும் நிழலிலும் எங்கு வேண்டுமானாலும் இந்த செடியை வளர்க்கலாம். கற்றாழை சதையை நன்கு குழைத்து தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவ முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக பொடுகு தொல்லை இருக்காது.
இறந்த செல்கள் அகற்றப்படும். உங்கள் முடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும். முடி உதிர்வால் அவதிப்படுபவர்கள் இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், தாதுக்கள் ஆகிய அனைத்தும் அதிக எடையைக் குறைக்கின்றன.
தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 20 சதவீதம் கற்றாழை சதையை கரைத்து குடிக்கலாம். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்பு, நச்சுக்கழிவுகள், குடலில் ஒட்டியிருக்கும் எண்ணெய் அனைத்தும் சுத்தப்படுத்தப்படுகிறது.
இதை அப்படியே குடிக்க பிடிக்கவில்லை எனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம். உங்களுக்கு சைனஸ் , சளி பிரச்சனை இருப்பின் இந்த செயல்முறையை தவிர்க்கவும். உங்களுக்கு குளுமையான பொருட்கள் ஒத்துக்கொள்ளாது என்றாலும் கற்றாழையை தவிர்க்கவும்.
கற்றாழை அழகு சார்ந்த சருமப் பராமரிப்புகளுக்கு மட்டுமன்றி தீக்காயங்கள் மற்றும் வீக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன் கற்றாழையின் சதையை சோப்பு போல் உடல் முழுவதும் தடவ வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து குளித்தால், சோப்பே போடாமல் தேய்த்து குளித்தாலும் சருமம் சுத்தமாகும். மேலும் சருமத்தில் உள்ள அனைத்து பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளும் இறந்துவிடும். சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறும்.. மிகவும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
கற்றாழை இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றைக் குறைக்கவும் பயன்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை சாறு குடித்து வந்தால், பிபி, சர்க்கரை நோய் கட்டுப்படும். இருப்பினும் இதை முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
தோல் வெடிப்பு, அரிப்பு, எரிதல், வீக்கம் ஆகியவற்றுக்கும் கற்றாழை உதவியாக இருக்கும்.
இப்படி பல நன்மைகள் இருப்பதால், தற்போது அனைத்து அழகு சாதன நிறுவனங்களும் கற்றாழை பேஸ்ட், அலோ வேரா கிரீம், கற்றாழை சோப், அலோவேரா கண்டிஷனர் என நூற்றுக்கணக்கான பொருட்களை தயாரித்து வருகின்றன.
அதிகப் பணம் செலவழித்து அந்தப் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, கற்றாழையை வீட்டிலேயே வளர்த்தால் தினமும் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.