இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 27,000 இராணுவத்தினர் சேவையில் இருந்து விலகியுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்றையதினம் (23) நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கு பிரச்சினை இருப்பதாகவும் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை என நான் நம்புகிறேன்.
அரசியல்வாதிகளால் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு துறையே பொலிஸ் துறை.
பொதுமக்களின் பாதுகாப்பில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவநம்பிக்கை வெளிப்பட்டது.
மேலும், நாட்டில் மாதத்திற்கு 50 கொலைகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.