சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளதாக சென்னையில் உள்ள இந்தியன் வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 17-ஆம் திதியான இன்று தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படும் என வங்கி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு கிளைகளுடன் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்தது.
சண்முக சுந்தரம் நாடார் சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள் வாங்குவதற்கு அதிகம் விரும்பும் கடையாக சரவணா ஸ்டோர்ஸ் உயர்ந்தது.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் கிளைகளில் இப்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆழமரமாக வளர்ந்த சரணவணா ஸ்டோர்ஸை சண்முக சுந்தரம் நாடாரின் மகன்கள் யோகரத்னம், ராஜரத்னம், செல்வரத்னம் என மூன்று பேரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் என சொத்துக்களை பிரித்துக் கொண்டனர்.
கடின உழைப்பால் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸுக்கு இந்தியன் வங்கியின் ‘வாராக் கடன் வசூலிப்பு பிரிவிலிருந்து நோட்டீஸ் விற்பனை நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது.
சரவணா ஸ்டோர்ஸின் பங்குதாரர் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் உரிமையாளர் பல்லாகு துரை பெயருக்கு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்தியன் வங்கி நோட்டீஸ் இந்தியன் வங்கி அனுப்பிய நோட்டீஸில், உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள 4,800 சதுர அடியில் 124 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையும், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) கடையும், 288,08,67,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இன்று ஏலம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை சென்னையில் உள்ள, இந்தியன் வங்கியின் வாராக்கடன் வசூலிப்பு பிரிவு சரவணா ஸ்டோர்ஸ் ஏலம் அறிவிப்பு தொடர்பான நோட்டீஸ் உண்மை என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் நேற்றையதினம் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என்றும் இன்று முழு தகவல்கள் தெரியவரலாம் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.