தாம் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தனியாக வாழ்ந்து வந்த தமது வீட்டுக்கு கடந்த வன்முறையின்போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார்.
சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்ய அரசியலுக்காக இலங்கை வந்த தமக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.
கீதா குமாரசிங்க தமது உரையின்போது , தாம் அரசியலில் இருந்து விடைபெற உள்ளதாக அழுகையுடன் கூறினார்.
தமது வீடு தாக்கப்பட்டபோது, தாம் தனியாக ஒரு அறையில் பயத்துடன் நடுங்கிய நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.