இலங்கையில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஒரு வார காலத்திற்கு அரசு நிறுவனங்கள் இயங்கும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி 4-ம் திகதி 75வது சுதந்திர தின விழாவை சிறப்புற கருதி 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தேசியக் கொடி ஏற்றப்படும், பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இது தொடர்பான சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு உரிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.