பொதுவாக வீடுகளில் இருக்கும் சில பொருட்கள் மருத்துவ ரீதியில் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதனை தினமும் சிறிதளவு எடுத்து கொள்வதால் காலப்போக்கில் குணப்படுத்த முடியாத சில நோய்களை குணப்படுத்தும்.
மேலும் மஞ்சள், கொத்தமல்லித்தூள், சீரகம், வெந்தயம் உள்ளிட்ட பொருட்கள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த வரிசையில் அடுத்து இருப்பவை தான் இஞ்சி, அந்த வகையில் இஞ்சியை அதிகம் எடுத்து கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இஞ்சி ஜுஸ் விரும்பிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்
1. இஞ்சி ஜுஸ் செய்யும் போது அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலப்பது கட்டாயமாகும். இவ்வாறு கலந்தால் தான் பூரண தீர்வு கிடைக்கும்.
2. இஞ்சி ஜுஸ் தினமும் செய்து குடித்து வந்தால் காலப்போக்கில் வயிற்று வலி, தலைவலி, ஜீரணம் ஆகிய பிரச்சினை சரியாகும் என மருத்துவர்கள் ஆராய்ச்சிகளில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
3. சர்க்கரை நோயாளர்கள் இந்த இஞ்சி ஜுஸ் குடிப்பதற்கு ஒரு எல்லை வைத்து கொள்வது அவசியம். காரணம் இந்த ஜுஸில் ஆண்டிபயாடிக் தன்மை அதிகம் இருக்கிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.
4. நிவாரணியாக செயற்பட்டு மூட்டுவலி கூட குணப்படுத்தும்.
5.கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்கள் இந்த சாற்றை தினமும் மருந்தாக குடித்து வரலாம். காரணம் இதிலிருக்கும் சில பதார்த்தங்கள் கெட்ட கொழுப்பை குறைத்து ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.