இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் பல இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சீனாவில் வைத்தியத்துறையில் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்புவதில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றுலா, முதலீடு, கொரோனாவுக்கு பிந்திய ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ச ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதேவேளை சீன அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபயவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்