சிறுவர்கள் முதல் பெரியவர்கள் எல்லோரும் பாடசலை மற்றும் வேலை முடித்து விட்டு வீடு திரும்பும் போது கடைகளில் நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிவது வழக்கமாக இருந்து வருகின்றது.
இந்த வழக்கம் உடல் பல ஆரோக்கியமற்ற செயல்களை செய்வாதால் வீட்டிலேயே தாயாரித்து ஆரோக்கிய உணவுகளை உண்ணுதல் இன்றைய வாழ்க்கை முறைக்கு மிக அவசியாக இருந்து வருகின்றது அவ்வாறு ஆரோக்கிய உணவை எவ்வாறு தயாரிக்கலாம் என நாம் இங்கு பார்ப்போம்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய கோளாறு என்று ஏதாவது ஒரு நோயுடன் இருக்கும் வயதானவர்களுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் ஏற்ற சத்தான ஸ்நாக்ஸ் வகைகளில் இந்த அப்பம் முக்கியமானது.
அப்பம் செய்ய தேவையான பொருள்கள்
சிவப்பு அரிசி – 1 கப்
கருப்பு உளுந்து – ஒரு கை
வெந்தயம் – 1 டீஸ்பூன்
ரவை – 2 டீஸ்பூன்
வாழைப்பழம் – 1
கருப்பட்டி அல்லது வெல்லம் – அரை கப் அல்லது இனிப்புக்கேற்ப
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
கருப்பு எள் – 2 டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய் துண்டுகள் – 3 டீஸ்பூன்
சுக்குத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
நெய்- தேவைக்கு
செய்முறை
சிவப்பு அரிசியை கல் நீக்கி சுத்தம் செய்து மூன்று முறை கழுவி 6 மணி நேரம் ஊறவிடவும். கருப்பு உளுந்தை எடுத்து 2 முறை கழுவி ஊறவிடவும். தோல் நீக்க வேண்டியதில்லை. தோல் நீக்காமல் போடலாம். அப்பம் என்பதால் நிறம் பெரியதாக மாறுபடாது. வெந்தயம் தனியாக ஊறவிடவும்.
தயாரிக்கும் முறை அரிசியை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து வாழைப்பழம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து நன்றாக மைய அரைத்து அரிசிமாவுடன் கலந்து உப்பு சேர்க்கவும்.
மாவு 6 மணி நேரம் புளிக்கவிடவும். இப்போது மாவு புளித்து பஞ்சு போல் ஆகியிருக்கும். தேவையெனில் குக்கிங் சோடா சிட்டிகை சேர்க்கலாம்.
வாணலியில் நெய் விட்டு கொப்பரை தேங்காய் துண்டுகளை வதக்கி மாவில் கொட்டவும். வெறும் வாணலியில் எள்ளை வறுத்து சேர்க்கவும். ஏலத்தூள், சுக்குத்தூள் கலந்து விடவும்.
இறுதியாக வெல்லத்தை உடைத்து கால் கப் பாதி அளவு தண்ணீர் விட்டு வெல்லம் சேர்த்து கரைந்து கொதிக்கும் போது மேலாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். சூடு பதத்துடன் மாவில் சேர்க்க வேண்டாம்.
சற்று ஆறியதும் மாவில் சேர்த்து விடுங்கள். மீண்டும் நன்றாக கலக்கி 30 நிமிடங்கள் வைத்திருந்து பணியாரக்கல்லில் ஊற்றி நெய் விட்டு இருபுறமும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான மணக்கும் அப்பம் தயார்.
குழந்தைகளுக்கு தயாரிக்கும் போது
கொப்பரைத்தேங்காயுடன் பொடியாக நறுக்கிய பிஸ்தா, முந்திரி, பாதாம், வால்நட் பருப்புகள், உலர் பழங்கள் பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றை நறுக்கி சேர்க்கலாம். மேலும் அதனுடன் விதைகளை சேர்க்கலாம். அனைத்தையும் நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.
வயதானவர்களுக்கு கொடுக்கும் போது
இனிப்பு அதிகம் சேர்க்க வேண்டாம். மாற்றாக பாதாம், வால்நட், முந்திரி பருப்புகள் சேர்க்கலாம். கால் பங்கு வெல்லம் சேர்க்கலாம். அல்லது கேரட், வெங்காயம் துருவி சேர்த்து பச்சை மிளகாய், கொத்துமல்லி நறுக்கி சேர்க்கலாம். சுவைக்கு தக்காளி அல்லது தேங்காய்ச்சட்னி சேர்க்கலாம்.