கண்டி – வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த நிலையில், பத்து வயதிற்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

