கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பதும், சினிமா நடிகைகளை திருமணம் செய்துகொள்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு ரோலில் நடித்து இருந்தார்.
இவருக்கு முன்பே பல கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடித்து இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது லிஸ்டில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில் இணைய போகிறார்.
தற்போது Spider-Man: Across The Spider-Verse படத்திற்காக ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் டப்பிங் பேசி இருக்கிறார். மேலும் நடிப்பிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாக பேட்டியில் கூறி இருக்கிறார் அவர்.
ஆனால் அதற்கு முன்பு நடிப்பு பயிற்சி பெற வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.

