சீரியல் பிரபலங்களின் தற்கொலைகள் அதிகம் நடந்து வருகின்றன.ஏன் இப்படி நடக்கிறது என்று சினிமா குழு யாரும் அதற்கான நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை.பிரபலங்களின் மரணங்கள் நிகழும் போதும் பேசுகிறோம், அதோடு அந்த பேச்சு அப்படியே மறைந்துவிடுகிறது. அப்படிதான் சீரியல் நடிகை சித்ராவின் மரணம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டது.
இப்போது ஒரு பேச்சும் இல்லை, அவரது பெற்றோர் மட்டும் தங்களது மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.அண்மையில் சித்ராவின் பெற்றோர்கள் அவர் இறந்த ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளனர்.அதில் பெட்டிற்கும், பேனிற்கும் நிற்கும் அளவிற்கு உயரம் உள்ளது, தனது மகள் எப்படி தூக்குப்போட்டிருப்பார்.
அப்படி இப்படி என சில விஷயங்களை கூறுகின்றனர். அதோடு ஹோட்டல் அறையில் சித்ராவை ஏதோ செய்துவிட்டு ஹேமந்த் ஜன்னல் வழியாக தப்பி ஓடிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.