கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஓடிவி என்ற தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது.
இவ்வாறானதொரு நிலையில் குறித்த A1 தொழினுட்பமானது மிக விரைவில் பல்வேறு துறைகளுக்குள்ளும் தாக்கம் செலுத்தவுள்ளதாக சர்வதேச தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சிகிரியாவில் வரையப்பட்டுள்ள பெண்கள், வெவ்வேறு ஆடைகளுடன் வரையப்பட்டிருந்தால் எவ்வாறு இருந்து இருக்கும் என்ற கற்பனையில் AI தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் என குறிப்பிட்டு சில ஓவியங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.