சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது 42 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பல பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதிகாரிகள் இன்னும் உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கையை சரிபார்த்து, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

