வங்காள மொழி செய்தி தொலைக்காட்சியான போய்சாக்கி நியூஸ் சேனனில் நேரலையில் செய்தியை வாசித்துள்ளார் தாஷ்னுவா.அண்மையில் நடைபெற்ற ஆடிஷன் மூலம் தேர்வான அவர் பலகட்ட பயிற்சிக்கு பின்னர் இதனை சிறப்பாக செய்துள்ளார்.
இந்நிலையில் இதன் மூலம் ஒரு மாற்றம் நடக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ‘நிச்சயமாக இந்த சமூகம் எங்களை போன்ற மூன்றாம் பாலினத்தவர்களை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றும் என நம்புகிறேன். இது ஆரம்பம் தான். நான் வளரும்போது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்தித்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார் அவர்.இதேவேளை செய்தியை வாசித்து முடித்ததும் ஆனந்தக்கண்ணீர் மல்க அழுத்துள்ளார் தாஷ்னுவா அனன் ஷிஷிர்.