சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என இல்லை என தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
உத்தேச சர்வகட்சி அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் இல்லை என்பதே அதற்கு முக்கிய காரணம் எனவும் அனுரகுமார திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் சர்வகட்சி அரசாங்கம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.