பிரபல தென்னிந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் – அரியாலையை சேர்ந்த ‘கில்மிஷா‘ வெற்றிவாகை சூடியுள்ளார்.
நேற்றைய தினம் (17) சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு, இலங்கைதமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் என பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கில்மிஷாவின் வெற்றியை அவரது ஊரான யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த மக்களும் கொண்டாடி வருகின்றனர். வெற்றிப் பெற்ற கில்மிஷாவிற்கு இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாய் காசோலை கொடுக்கப்பட்டிருக்கிறது.
கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு தரம் 8ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். தன்னுடைய மூன்று வயதில் இருந்த பாட ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் கோயில்களில் பஜனைப் பாடல்களை மாத்திரமே பாடி வந்துள்ளார்.
பின்னர் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் தான் பாடகியாகியுள்ளார். இவர் சாரங்கா இசைக்குழு என்ற குழுவுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளில் படி இருக்கின்றார்.
இது தவிர கில்மிசா இந்தியப் பாடகர்களான ரமணியம்மா, அஜய் கிருஷ்ணா, வர்ஷா ஆகியோருடனும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பாடி இருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசைக்கச்சேரிக்கு சரிகமப குழு வந்திருந்த நிலையில் அவர்கள் கில்மிசாவின் குரலைக் கேட்டு சரிகமப நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில் போட்டியில் பெற்று யாழ்ப்பாண தமிழர்களுக்கு கில்மிசா பெருமையை தேடிக்கொடுத்துள்ளார்.
அதேவேளை கில்மிசாவுக்கு வைத்தியராக வேண்டும் என்பது தான் கனவு. அவர் பாடகியாகவும் இருந்து கொண்டு வைத்தியராகவும் வருவேன் என்ம் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.