இந்தியாவின் டெல்லியில் கடவுள் கூறியதாக இளைஞர்கள் இருவர் ஆறு வயது சிறுவனை பலிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கழுத்து அறுக்கப்பட்டு கொலை
குறித்த சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸார், கட்டிட வேலை பார்க்கும் இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பணக்காரனாக வாழ வேண்டும் என்றால் சிறுவனை நரபலி கொடுக்க வேண்டும் என கடவுள் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.