பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
சமீபத்தில் யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இப்படத்திற்கு ‘ஓ மை கோஸ்ட்’ ‘OMG’ என்று தலைப்பு வைத்து போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மற்றொரு நாயகியாக தர்ஷா குப்தா நடிக்கிறார்.