நம்முடைய சாஸ்திர முறைகளில் வீட்டிற்கு வாங்கக் கூடிய பொருள்களை கூட எந்த நாளில் எதை வாங்க வேண்டும் வாங்க கூடாது என்பதற்கு பெரிய குறிப்பு உள்ளது. இவையெல்லாம் நம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம் தான்
இதற்கெல்லாம் கூட நேரம் காலம் பார்க்க வேண்டுமா? என்ற கேள்வி எழலாம்.
ஒரு நாளில் எப்படி நல்ல நேரம் கெட்ட நேரம் என்பவை இருக்கிறதோ, அதை போல பொருட்களிலும் சில பொருட்கள் சேர்ந்தால் நன்மை பயக்கும்.
சில பொருட்கள் வீட்டில் சேர்ந்தால் தீமைப்பயக்கும் என்பதும் உள்ளது.
அதை போல தான் சில நாட்களில் சில பொருட்களை வாங்குவது நம் குடும்பத்திற்கு கேடு விளைவிக்கும்.
சில பொருட்களை வாங்கும் போது வீடு சுபிட்சமாக இருக்கும். இப்படி நாம் வாங்கக் கூடாத பொருட்களில் சனிக்கிழமை எதை வாங்க கூடாது என்பதை பற்றி மட்டும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
சனிக்கிழமையில் வாங்க கூடாத பொருள் சனிக்கிழமை என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது சனீஸ்வர பகவான் தான்.
அடுத்து அவருக்கு ஏற்றக் கூடிய எள் தீபம்.
இதற்கு காரணம் சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வணங்கி எள் தீபம் ஏற்றும் போது நமக்கு ஏற்பட்டிருக்கும் சனி தோஷம், கிரக தோஷம் போன்றவை எல்லாம் நீங்கி நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று தான்
.அப்படி நம்முடைய தோஷங்களையும், துக்கத்தையும் தீர்க்கக் கூடிய அந்த எள்ளையே சனிக்கிழமையில் வாங்க கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.
இதையெல்லாம் இதுவரையில் பலரும் கேள்வி படாத ஒரு விஷயமாக இருக்கலாம்.
ஏனெனில் அனைவருமே சனிக்கிழமை தான் எள் தீபம் ஏற்றவோம்.
அப்படியானால் சனிக்கிழமை இதை வாங்க கூடாது என்றால் எப்படி என்ற யோசனை வரும் தானே. சனிக்கிழமையில் எள் தீபம் ஏற்ற வேண்டும் என நினைப்பவர்கள் அதை வெள்ளிக்கிழமை அன்றே வாங்கி வைத்துவிட வேண்டும்.
வீட்டில் வாங்கி வைத்து எடுத்து செல்லலாமா என்றால் அதில் தவறு கிடையாது.
இதை கோவிலுக்கு எடுத்து சென்று ஏற்றலாம். ஆனால் சனிக்கிழமை அன்று எள் வாங்கி தீபம் ஏற்றக் கூடாது.
எள்ளானது சனி பகவானுக்குரிய தானியமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் அதை வாங்கும் போது அந்த தோஷம் நமக்கு தொடரும் என்றும் சொல்லப்படுகிறது.
இதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய ஒரு தாந்த்ரீக முறையாகவும் பார்க்கப்படுகிறது.
பலர் கோவில் அருகில் எள் தீபம் விற்பார்கள் அதை வாங்கி அப்படியே ஏற்றுவார்கள் அதையும் சனிக்கிழமையில் இது போல வாங்கி ஏற்றுவதை தவிர்க்கலாம்.
இன்றைய சூழ்நிலையில் வேலைக்கு செல்பவர்கள் அப்படியே செல்லும் வழியில் இது போல தீபம் ஏற்றி விட்டு செல்வார்கள்.
இது அவர்களுக்கு சுலபமாகவும் இருக்கும்.இந்த தீபங்கள் ஏற்றுவது வழிபாடு செய்வது அனைத்தும் நம்முடைய குறைகள் தீரவும் துன்பம் தீரவும் தான் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்.
இப்படி ஏற்றுவதால் அது தீராது வளரும் என்றால் நாம் கொஞ்சம் சிரமத்தை எடுத்து நம்முடைய குடும்ப நலனுக்காக இது போன்ற விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது தானே.