நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் பதவிக்கு ஷசீந்திர ராஜபக்ஷவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனத் நிஷாந்தவின் மறைவால் வெற்றிடமடைந்த பதவிக்காக அவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஷசீந்திர ராஜபக்ஷ இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷசீந்திர தற்போது நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.