இந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்று (06) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இவர்கள் கடல் எல்லை மீறல் காரணமாக கடந்த நவம்பர் மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.