திருமணம் ஆன 15 நாட்களில் திருப்பதிக்கு சென்ற புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாத யாத்திரையாக படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருத்தணி அருகே கேசரம் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ், பெங்களூருவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சுவாதி என்ற பெண்ணுக்கும் கடந்த 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக படி வழியாக பாத யாத்திரை சென்றுள்ளனர். 2 ஆயிரத்து 350ஆவது படியில் ஏறும்போது, திடீரென நரேஷுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுமணப்பெண் சுவாதி, அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்த நிலையில் சக பக்தர்கள் நரேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் நரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருப்பதியானை தரிசிக்க சென்ற மணமகன் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.