மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர்பின் இறுதி போட்டி நேற்றைய தினம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி தலைவர் மெக் லென்னிங் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 44 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் பெங்களூர் அணி சார்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து 114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஒவரில் 114 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றது.
பெங்களூர் அணி சார்பில் எல்லிஸ் பெர்ரி 35 ஓட்டங்களையும், சோஃபி டெவின் 32 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 31 ஓட்டங்களை எடுத்தனர்.
இதன் மூலம் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடரை ஆர்சிபி அணி வென்றிருக்கிறது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆர்சிபி அணி வெல்லும் முதல் கோப்பை இதுவாகும் இதனால் பெங்களூர் ரசிகர்கள் ஈசாளா கப் நமதே என்று கொண்டாடி வருகிறார்கள்.