ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பது உட்பட மேலும் சில விடயங்களை வலியுறுத்தி 100 அடி மரத்தில் ஏறி தனிநபரொருவர் இன்று போராட்டத்தை மேற்கொண்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி கீழ் பிரிவு தோட்டத்தில் 45வயதுடைய பழனியாண்டி முருகேஸ் என்ற நபரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த நபர் நூறு அடி உயரம் கொண்ட மரத்தின் மீது எறி இலங்கை தேசிய கொடியை பிடித்தவாறு, எதிர்ப்பு பதாதைகளை குறித்த மரத்தில் காட்சிப்படுத்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
‘கோ ஹோம் கோட்டா’ வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், காலி முகத்திடலில் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கேகாலை ரம்புக்கனை பகுதியில் தூப்பாக்கிசூட்டில் உயிரிழந்த நபருக்கு நீதி வேணடும் என வலியுறுத்தி நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.