நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பைசல் காசிம் நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், மேலும் நான்கு உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் ஒதுங்கியிருந்தால், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் 113 என்ற தனிப் பெரும்பான்மையைக்கூட இழக்க நேரிடும்.
இன்னும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இருந்து வெளியேற உள்ளதாக குறிப்பிடப் படுகிறது அப்படியான சூழல் விரைவில் நடப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளமை குறிப்பிடத் தக்கது.
அரசின் தனிப் பெரும்பான்மை ஆட்டங் காண்டுள்ள இன் நிலையில் இடைக்கால அரசு உடனடியாக தேவை – இல்லையேல் நாங்கள் தனி வழி செல்கிறோம் என ஆளுங்கட்சியின் பின்வரிசையின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் நேரில் தெரிவித்துள்ளமை விரைவில் அரசிற்கு வரவுள்ள நெருக்கடியை தவிர்க்க முடியாத சூழல் எழுந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.