கோட்டாபய (Gotabaya) அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து நீக்கி விட்டு புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என சிங்கள ராவய ( Sinhala Ravaya) அமைப்பு சூளுரைத்துள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய (Gotabaya) – மகிந்த (Mahinda) அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தள்ளன. ஆனால் நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆளும் பங்காளிக் கட்சிகள், இந்த ஆட்சியினை உருவாக்க பாடுபட்ட தேரர்கள், எதிர்க்கட்சிகள், தொழில்சங்கள் மற்றும் நாட்டு மக்கள் என அனைவருமே இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்திற்கு சிங்கள ராவய அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.