பிரான்சின் உல்லாசத்துறை மற்றும் வெளிநாடுகளிலுள்ள பிரெஞ்சுமக்களிற்கான அரசாங்கச் செயலாளர் ஜோன்-பப்திஸ்த் லூமுவான் (Jean-Baptiste Lemoyne) இந்தக் கோடைகால விடுமுறைகளிற்குப் பிரெஞ்சு மக்கள் வெளிநாடுகளிற்குச் செல்லலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் பிரான்சிற்குள் விடுமுறைகளிற்குச் செல்வதை, இவர் மேலும் ஊக்குவித்துள்ளார்.
பிரெஞ்சு மக்களிற்கு, அவர்களின் விடுமுறைகளைக கழிப்பதற்கு ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். அதனால் தற்பொழுது எந்தத் தடைகளும் இன்றி அவர்கள் பயணிக்கலாம் எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரான்சில் இன்னமும் நாளாந்தம் 30.000 பேர்வரை கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர் என்பதை, அமைச்சர்களும் செயலாளர்களும் மறந்துள்ளமை போலவே இவர்கள் அறிவித்தல் உள்ளது.