கொழும்பு கொட்டாவ பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1.39 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரின் வீட்டில் இந்த பணம் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளுக்கு தொடர்புடைய ஹரக் கட்டகே என்பவரின் உதவியாளரான சரித் சந்தகெழும் எனப்படும் ரன் மல்லியின் மைத்துனரின் வீட்டிலேயே இந்த பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்துடன் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும் கொட்டாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.