பாகற்காயில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. ஆனால், அதன் சுவை கசப்பாக இருப்பதால் பலர் இதை உண்ணாமல் தவிர்த்து விடுகின்றனர்.
கசப்பான சுவை இருந்தபோதிலும், உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது. அறிவியல் பூர்வமாகவும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாகற்காய் டீயை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் இயற்கை உணவாக பாரம்பரியமாக கருதப்பட்டு வருகிறது. எனவே இந்த டீ நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக அளவில் உதவுகிறது.
பாகற்காயில் ஆன்டி இன்ஃபிளமேடரி பண்புகள் உள்ளன, எனவே பாகற்காய் டீ ஆனது கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் லெவலை குறைக்க உதவுகிறது. ஹை-கொலட்ஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு பாகற்காய் டீ அருந்துவது நல்ல பலனை தரும்.
பாகற்காயில் வைட்டமின் சி இருப்பதால், நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பாகற்காய் டீயில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவை இருப்பதால் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரலை சுத்தப்படுத்தும்: கல்லீரல் பிரச்சனைகள், தொற்றுகள் உருவாகாமல் தடுக்கும். மேலும், கல்லீரலில் இருக்கும் நச்சுகளை அகற்றி கல்லீரலை சுத்தமாக வைக்க உதவுகிறது.
பாகற்காயின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும்.
மிதமான சூட்டில் 10 நிமிடம் தண்ணீரை கொதிக்க விடவும், இதனால் பாகற்காயின் எசென்ஸ் முழுவதும் தண்ணீரில் இறங்கியிருக்கும். – பிறகு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்து சிறிது நேரம் அப்படியே விடவேண்டும்.
பின்னர், உங்கள் விருப்பப்படி, டீ பாட் அல்லது டீ கப்களில் ஊற்றவும்.
பாகற்காய் சாறு தண்ணீரில் நன்கு சேர்ந்த பிறகு, டீ-யை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்ற வேண்டும்.
பாகற்காய் டீயில் உள்ள கசப்பு சுவையை போக்கிட சிறிது நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.