பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஹெரோயின் வியாபாரதத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலானாய்வு முகமை இலங்கை அரசின் ஒத்துழைப்பை பெற தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகளிள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.