நாட்டில் அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரித்தமை அது தொடர்பில் கேள்வி கேட்டால் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதுவா ஜனநாயம் நிறைந்த நாடு என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தர் (V.surender) கவலை தெரிவித்துள்ளார்.
ஆட்சி முறைக்கு ஏதிராக மாற்றத்தை கொண்டு வர ஒன்றிணையுங்கள் எனும் துண்டு பிரசுரம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் கையெழுத்து வேட்டையும் செங்கலடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த ஆட்சியாளர்களும் அவர்களுடைய விடயங்களை நிறைவேற்ற கூடவே உள்ள கூஜாதுக்கும் நாடாளுமன்ற உறுப்பனர்களும் தான் பால்சோறு கொடுத்து ஆட்சிக்கு கொண்டு வந்த ஜனாதிபதியினை இன்று அதே மக்கள் வீட்டிற்கு செல்லுமாறு வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
இந்த மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களில் கைவைத்து அடித்தமை அது தொடர்பில் கேள்வி கேட்டால் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள்.
இதுவா ஜனநாயம் நிறைந்த நாடு அண்ணாவை நாடாளுமன்றம் கொண்டு வருவதற்கு ஒரு சட்டம் மக்களை அடக்குவதற்கு ஒரு சட்டம் ஆனால் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எந்தவொரு சட்டமும் இல்லை.
ஒவ்வொரு அரசாங்க திணைக்களத்திற்கும் Mission and vision உள்ளது ஆனால் ஒட்டு மொத்த இலங்கைக்குமான ஒர் கொள்கை இல்லை என்பதை இவ் விடத்தில் கூறிக்கொள்கிறேன்.
அவ்வாறு இருந்து இருந்தால் எம்நாட்டின் பொருளாதார கொள்கை சரிந்திருக்க முடியாது. 74 வருட காலமாக நாம் மற்றைய நாடுகளையே அண்டி வாழ வேண்டிய சூழலையே இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
இன்றும் வெளிநாட்டவர் விட்டு சென்ற தேயிலை, இறப்பர், கோப்பி போன்றவற்றையே ஏற்றுமதி பொருட்களாக கொண்டுள்ளோம்.
இதில் ஏதாவது மாற்றத்தை எந்த ஒரு அரசும் செய்யவில்லை! என்பதை மக்கள் உணர்ந்தமையால் தான் இன்று பல அரசியல் வாதிகள் முகாம்களில் பதுங்கியுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்போம்.
புதிய அரசமுரமையை உருவாக்க வேண்டும் பொய்களை நம்பி ஏமாந்தது போதும் புரட்சி செய்து நாட்டை கட்டியெழுப்புவோம்.
74 வருடகாலம் அரசியல் செய்து நாட்டை பாதளத்திற்குள் தள்ளிவிட்ட இவ் ஆட்சி முறைக்கு ஏதிராக மாற்றத்தை கொண்டு வர ஒன்றிணையுங்கள் என்றார்.